32நேமி நாதம்

 
      ‘நிகரில் வகரம் வந்தால்'  என்று மிகுத்துச் சொல்லியவனதால்
வகரத்தைக் கண்டு மகரங் கெடும் இடமும் உள. அவை மரவேர், சுர வழி

என அறிக.                                                 (18)

                
சில அளவுப் பெயர்களின் முடிவு

1
9.     உரிவரி னாழியி னீற்றுயிர்மெய் ஐந்தாம் 1
       வருமுயிரொன் றொன்பான் மயங்குந் - தெரியத்  
       திரிந்தும் 2 விகாரங்க டேர்ந்தாறு மூன்றும் 3
       பொருந்துமிடங் கண்டு புகல்.

----------------------- 
1.   நாழியின் ஈற்றுயிர்மெய் ஐந்தாம் என்பதற்கு நாழி என்பதன்
ஈற்றில் உள்ள ‘ழி' என்பது நீங்க, ஆங்கு ஐந்தாம் மெய்யாகிய
டகரமெய் வந்து பொருந்தும் என்பது கருத்தாகக் கொள்க, ‘ழி' டகர
மெய்யாகத் திரியாதாதலின்.

     நாழியின் ஈற்றுயிர் மெய்யாகிய ‘ழி' ஐந்தாம் மெய்யாகிய
டகரமெய்யாம் என்பது, அதன் பொருளாம் எனினும், முன் கூறியதே
அதன் கருத்தாம் எனக் கொள்க.

2.   வரும் உயிர் ஒன்று ஒன்பான் தெரியத் திரிந்தும் மயங்கும் என
இயைக்க. ஒன்றும் ஒன்பானும் என உம்மை கொடுக்க. உயிர் ஒன்று
அகரமாம் எனவும், உயிர் ஒன்பான் ஐகாரமாம் எனவும் அறிக. தெரிய
- விளங்க. திரிந்தும் மயங்கும் என்ற உம்மையினால், திரியாமலும்
மயங்கும் என்று பொருள் கொள்ளுதலுமாம்; இஃது எதிர்மறைப்
பொருள். திரியாமல் மயங்குதலாவது நின்ற முறையே அகரம்  உள்ள
இடத்தில் ஐகாரம் வந்து பொருந்துதல். திரிந்து மயங்குதலாவது
அம்முறை மாறி ஐகாரம் உள்ள இடத்தில் அகரம் வந்து
பொருந்துதல்.

3.   விகாரங்கள் ஆறும், மூன்றும் ஆவன; செய்யுள் விகாரங்களாகிய
வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல்
என்னும் ஆறு விகாரங்களும்; முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை
என்னும் மூன்று விகாரங்களுமாம்.

     இந்நூலாசி்ரியர் செம்மை முதலிய பண்புப் பெயர்கள் அடையும்
விகாரங்களைச் செய்யுள் விகாரம் எனக் கொண்டனர்; சங்கர
நமச்சிவாயப் புலவர் முதலிய நன்னூல் உரையாசிரியர்கள் புணர்ச்சி
விகாரம் எனக்கொண்டார்கள். அவர்கள் இவற்றைப் புணர்ச்சி
விகாரம் எனக்கொண்டார்கள் என்பதை எங்ஙனம் பெறுதும்  எனின், 
‘ஈறு போதல்' என்னும் சூத்திர உரையில், அவர்கள்  பெயர்
விகுதியோடும்,  வினை விகுதியோடும், பதங்களோடும் புணரினும்
ஒருவழி இவ்விகாரப்படும் என்பார். பகுதிக்கென்னாது, பொதுமையிற்
‘பண்பிற் கியல்பே' என்றும் கூறினார்  என்றும்,  பதப்புணர்ச்சிக்கும்
ஈண்டுக் கூறுதல் ஒப்பின் முடித்தல் என்னும் உத்தி  என்றும்
கூறுதலாற் பெறுதும் என்றுணர்க.

    செம்மை என்னும் சொல், விகுதியோடும், பதத்தோடும்
கூடுகையில் ஈற்று மை கெட்டுச் செய்ய, செவ்வி எனவும் செவ்வானம்
எனவும் ஆகும் மகர மெய்யின் திரிபு செய்யுள் விகாரங்களுள்
அடங்காமையானும், புணர்ச்சி விகாரங்கள் மூன்றனுள் ஒன்றாகிய
திரிபு விகாரத்தினுள் அடங்குதலானும் நன்னூல் உரையாசிரியர்கள்
கொள்கையே ஏற்புடையதாம் என்க.