‘வருமுயிர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் ஐகாரம்
அகாரமாம்
பொழுது, வல்லெழுத்து வந்தாலன்றி ஆகாது. 1 ஒழிந்த மெல்லினமும்,
இடையினமும், உயிரும் வந்தால் இயல்பேயாம். அவை வருமாறு: - முறி,
வேர், இலை என்பன வந்தாற் பனைமுறி, கூவிளைவேர், கூவிளையிலை என
முடிக்க.
இன்னும் அவ் விதப்பினான் வினைச்சொல் வந்தாலும்
ஐகாரம்
திரியாது நிற்கும்; பனைகுறிது, ஆவிரைசிறிது, கூவிளைசிறிது என முடிக்க.
இனி விகாரங்கள் ஆறு மூன்றுமாவன:
அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும்
நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்
நாட்டல் வலிய வென்மனார் புலவர்
(தொல். சொல். எச். 7)
குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்
(ஷ, 57)
குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல (ஷ, 58)
என்பன விரித்துக்கொள்க.
அவை வருமாறு: குன்றியலுகரம் என்பது மெலிக்கும்வழி
மெலித்தல்; குறுத்தாட் பூதம் என்பது வலிக்கும்வழி வலித்தல்; தண்ணந்
துறைவன் என்பது விரிக்கும்வழி விரித்தல்; ‘நீலுண் டுகிலிகை' என்பது
தொகுக்கும்வழித் தொகுத்தல்; பாசிழை என்பது நீட்டும் வழி
நீட்டல்: ‘திருத்தார் நன்றென்றேன் றியேன்' என்பது குறுக்கும்வழிக்
குறுக்கல்; மரையிதழ் என்பது தலைக்குறைத்தல்; ‘வேதிநவெரிநி னோதிமுது
போத்து' என்பது இடைக் குறைத்தல்; ஆல் என்பது கடைக் குறைத்தல்;
இதை ஏற்புழிக் கோடல் என்பதனால் அறிந்து கொள்க.
(19)
சில எண்ணுப் பெயர்களின் முடிபு
20. நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான்
குன்றும் உயிருயிர்மெய் கூடுமேல் - ஒன்றியஎண்
பத்தினிடை ஆய்தமுமாம் பந்நீண்டும் நீளாதும் 2
மற்றவைபோய் ஈறு வரும்.
-------------------------
1. இதற்கு வருமொழியின் முதலில் வல்லினம் வந்தால்தான் ஐகாரம்
அகரமாம் என்பது கருத்தாம் என்றறிக.
2. பந்நீண்டும் நீளாதும் - பகரம் நீண்டும், நீளாதும்.
|