ணகர ஒற்றாய் இரட்டித்துப், பின்னின்ற
பான் பத்து என்னும்
பதத்தைக் கெடுத்து, ணகர ஒற்றிலே ஊகார உயிரை ஏற்றி, றகர உகரத்தை
ஈற்றிலே வருவித்துத் தொண்ணூறு என முடிக்க.
தொள்ளாயிரம் என்றாம் பொழுது ஒன்பான் என நிறுத்தி, நூறு
என
வருவித்து, முன்போலத் தகர ஒகரத்தை நிறுத்தி, ணகர ஒற்றை ளகர
ஒற்றா யிரட்டித்து, பான் நூறு என்னும் பதத்தைக் கெடுத்து, ஆகார உயிரை
ஏற்றி இரம் என்னும் பதத்தை வருவித்து, தோன்றும் யகர வகரம் 1
என்பதனால் யகர உடம்படு மெய்யை வருவித்துச் செம்மை யுயிரேறுஞ்
செறிந்து 2 என்பதனால் இகரத்தை ஏற்றித் தொள்ளாயிரம் என முடிக்க.
(21)
சில தொடர்மொழிகளின் முடிபு
22. மேய இருசொற் பொருள்தோன்ற வேறிருத்தி
ஆய இடைச்சொல் அடைவித்தால் - தூயசீர்
ஆவிபோம் ஒற்றுப்போம் ஆங்குயிர்மெய் போமன்றி
மேவியசுட் டாங்கே மிகும்.
எ-ன்:
சொற்கள் பகுதி விகுதி செய்யுமாறும், சாரியைச் சொற்கள்
முடியுமாறும் உணர்த்துதல் நுதலி்ற்று.
இ-ள்:
பொருந்தி இருந்தன இரண்டு சொல்லை முடித்துக் காட்டுக
என்றால், அச் சொற்கள் இரண்டையும்
பொருள் தோன்ற வேறே இருத்தி,
அவ்விடத்துக்கு ஏற்ற இடைச்சொற்களை வருவித்து முடிக்குமிடத்து,
உயிர்
அழிந்து முடிவனவும், மெய் அழிந்து முடிவனவும், உயிர் மெய் அழிந்து
முடிவனவும்,
சுட்டுமிக்கு முடிவனவும் உள. சுட்டாவன: அ இ உ என்பன.
இவை வேண்டும் இடங்களிலே தோன்றி
முடியவும் பெறும் எ - று.
அவற்றுட் சில வருமாறு: வேணவா என்பதனைப்
பிரிக்குமிடத்து,
வேட்கை என நிறுத்தி, அவா என வருவித்து முடிக்க.
மூவாறு என்புழி மூன்று என நிறுத்தி, ஆறு என
வருவிக்க.
வெள்ளாடை என்றால் வெண்மை என நிறுத்தி,
ஆடை என
வருவிக்க.
-----------------------------
இந்நூலின் இவ்வதிகாரம் சூ. 13.
இந்நூலின் இவ்வதிகாரம் சூ. 4
|