4நேமி நாதம்

அவையடக்கம்


2.    உண்ண முடியாத ஓதநீர் வான்வாய்ப்பட்
     டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல்
     நல்லாரைச் சேர்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
     எல்லாருங் கைக்கொள்வர் ஈங்கு.

என்பது அவையடக்கம் உணர்த்துதல் நுதலிற்று.


    
இ - ள்: உலகத்து யாவர்க்கும் உண்ண முடியாத ஓதநீர், மேகத்தின்
வாய்ப்படுதலான் அமுதமானாற்போல, என்னால் உரைக்கப்பட்ட
புன்சொல்லும் நல்லோர் செவிப்படுதலால் யாவருங் கைக்கொள்வர் எ-று.
    

பாயிரம் முற்றிற்று.