சொல் அதிகாரம்43

     புதியவாய சொற்கள் பெற்றவாறு என்னையோ? வெனின், நூல்களிலும்
என்ற உம்மை எதிரது போற்றல் என்னும் எச்ச உம்மை யாதலாற்
பெறப்பட்டது.

     சொல் எனைத்து வகையான் ஆராய்ந்தானோ? எனின், எட்டு
வகையான் ஆராய்ந்தான். அவை மேலைச் சூத்திரத்திற் சொல்லுதும்.

      
 போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் பேதாய் 


என்பது மகடூஉ முன்னிலை.                                       (க)

      
இத்துணை வகையாற் சொல் ஆராயப்படும் என்பது

2,    ஏற்ற திணையிரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
     வேற்றுமை எட்டும் தொகையாறும் - மாற்றரிய
     மூன்றிடமும் காலங்கண் மூன்றும் இரண்டிடத்தாற்
     றோன்ற உரைப்பதாஞ் சொல்.

  
   எ - ன்: ஆராயப்பட்ட சொல் இனைத்து வகைப்படும் என்பது
உணர்த்துதல் நுதலிற்று.

      
இ - ள்: இரண்டு திணை வகுத்தும், அத் திணைக்கண் ஐந்து பால்
வகுத்தும், ஏழு வழு வகுத்தும்,  எட்டு வகைப்பட்ட வேற்றுமை வகுத்தும்,
ஆறு தொகை வகுத்தும், மூன்று இடம் வகுத்தும்,  மூன்று காலம் வகுத்தும்,
இரண்டிடத்தான் ஆராயப்பட்டது சொல் எ-று.

      அவற்றுள், இரண்டு திணையாவன: உயர்திணை, அஃறிணை என்பன.
ஐந்து பாலாவன: ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்பன, ஏழு
வழுவாவன: திணைவழு, பால்வழு, மரபுவழு, வினாவழு, செப்புவழு,
காலவழு, இடவழு என்பன. என்னை?

       
  திணைபான் மரபு வினாச்செப்புக் கால
         மிடனோடே ழாகு மிழுக்கு 


என்றாராகலின். வேறறுமை யெட்டாவன: பெயர், ஐ, ஒடு, கு, இன், அது,
கண், விளி என்பன. தொகை ஆறாவன: வேற்றுமைத்தொகை,
உம்மைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமத்தொகை,
அன்மொழித்தொகை என்பன. என்னை?

      
  வேற்றுமை யும்மை வினைபண் புவமை
        யன்மொழி யென்றிவை தொகையா றாமே