சொல் அதிகாரம்45

      இ - ள்: ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்று சொல்லப்பட்ட
ஐந்து பாலினும், உயர்திணை: ஒருவன், ஒருத்தி, பலர் என மூன்று பாற்படும்;
அஃறிணை: ஒன்று பல என இரண்டு பாற்படும் எ-று.

இவ்வாறு பால் விளங்கி நிற்பன படர்க்கைக்கண் என்றவாறு. என்னை?

      
 ஒருவன் ஒருத்தி பலரென்று மூன்றே
       உயர்திணை மருங்கிற் படர்க்கைப் பாலே
       யொன்றன் படர்க்கை பலவற்றுப் படர்க்கை
       யன்றி யனைத்தும் அஃறிணைப் பால. 

என்றார் அவிநயனார்.

ஒரு சாராசிரியர் இருதிணை ஐம்பாலைச் சொல்லுமாறு:

 உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே. 
(தொல்.கிளவி. சூ. 1)

 ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
யம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே.   
                 2  
     

 ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொ லஃறிணை யவ்வே   
                     3

 பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந்
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென வறியு மந்தந் தமக்கிலவே
வுயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். 
               4

என்றாராகலின்.                                            (4)
     

ஐம்பால்களின் இறுதி நிலைகள்


5.    அன்ஆனும் அள்ஆளும் அர்ஆர்பவ் வீறுமாம்
     முன்னை உயர்திணைப்பான் மூன்றற்கும் - தன்வினைகொண்டு
     ஆய்ந்த துறுடுவும் அஆவவ் வீறுமாம்
           ஏய்ந்த அஃறிணைப்பாற் கீங்கு.