கோடின்று, குளம்பின்று இவை வினைக்குறிப்பு.
டு
-
குண்டு கட்டு, குறுந்தாட்டு என்பனவும் அவை.
அ
-
உண்டன, உண்ணாநின்றன, உண்பன இவை வினை.
கரிய, செய்ய இவை வினைக்குறிப்பு.
ஆ
-
உண்ணா, தின்னா என்பன எதிர்மறுத்து வந்தனவாயினும்,
வினை.
வ
-
உண்குவ, தின்குவ இவை வினை. அஃறிணை யிருபாலும்
அடைவே கண்டுகொள்க.
‘முன்னை' என்று மிகுத்துச் சொல்லியவதனால், பெயரொடு வந்தாலும்,
பால் தோன்றுவனவும் உள. அவை: யாவன், யாவள், யாவர், யாது, யாவை,
அவன், அவள், அவர், அது, அவை எனவும், ஒருவன், ஒருத்தி, பலர்,
ஒன்று, பல எனவுங் கண்டுகொள்க.
(5)
வழு
6. பாலே திணையே வினாவே பகர்மரபே
காலமே செப்பே கருதிடமே - போலும்
பிறழ்வுஞ் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்
உறழ்வுஞ் சிதைந்த உரை.
எ - ன்:
வழுச்சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
பால் மயக்கம், திணை மயக்கம், வினாமயக்கம், மரபு மயக்கம்,
கால மயக்கம், செப்பு மயக்கம், இட மயக்கம் என்று சொல்லப்பட்ட ஏழு
மயக்கமும் படாமற் சொல்லுக. மயங்கில் வழுவாம். சினைச்சொல்லும் முதற்
சொல்லும் தம்மில் ஒத்த பொருளை உவமியா தொழியினும் வழுவாம் எ-று.
திணை வழு ஆவன:
அவன் வந்தது என உயர்திணை ஆண் பால்
ஒருமை அஃறிணை ஒருமைப்பாலில் வழுவிற்று. அவன் வந்தன என
உயர்திணை ஆண்பால் ஒருமை அஃறிணைப் பன்மைப் பாலில் வழுவிற்று.
அவள் வந்தது என உயர்திணைப் பெண்பால் ஒருமை யஃறிணை
யொருமைப் பாலில் வழுவிற்று. அவள் வந்தன என உயர் திணைப்
பெண்பால் ஒருமை அஃறிணைப் பன்மைப் பாலில் வழுவிற்று. அவர் வந்தது
என உயர்திணைப் பன்மை அஃறிணை ஒருமையில் வழுவிற்று. அவர்
வந்தன என உயர்திணைப் பன்மை அஃறிணைப்
|