தெங்கந் தோட்டம் என்பன பன்மையாலும், தலைமையாலும் பெயர் பெற்றன.
இடைச்சேரி, வாணிகச்சேரி
என்பன பன்மையாற் பெயர் பெற்றன.
செங்கோன் சேரி, செவ்வண்ணச் சேரி என்பன தலைமையாற்
பெயர்
பெற்றன. காரைக் காடு என்பது பன்மையாற் பெயர் பெற்றது. ஆலங்காடு
என்பது
தலைமையாற் பெயர் பெற்றது. எயினர் நாடு என்பது பன்மையாற்
பெயர் பெற்றது. பாண்டி நாடு
என்பது தலைமையாற் பெயர் பெற்றது.
பிறவும் அன்ன. என்னை?
ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்
(தொல். கிளவி. 49)
(8)
எனக்கொள்க.
திணைவழு வமைதி
9. குழுஅடிமை வேந்து குழவி விருந்து
வழுவுறுப்புத் திங்கள் மகவும் - பழுதில்
உயர்திணைப் பண்போ டுயிருறுப்பு மெய்யும்
அயர்வில் அஃறிணையே ஆம்.
எ - ன்:
உயர்திணையை அஃறிணைபோற் சொல்லுதல் வழுவே
ஆயினும் அமைக்க என்பதனை உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள்: குழுமுதலாய்க் கிடந்த பன்னிரண்டும் உயர்திணைப்
பெயராயினும் அஃறிணையாகச்
சொல்லுதல் வழு அன்று என்க எ-று.
அவை வருமாறு: குழு இருந்தது, அடிமை வந்தது, வேந்து எழுந்தது,
குழவி அழுதது, விருந்து வந்தது
எனவும்; வழுவுறுப்பு; குருடு வந்தது,
செவிடு போயிற்று, அலி நின்றது எனவும்; திங்கள் எழுந்தது,
மகவு கிடந்தது
எனவும்; உயர்திணைப் பண்புகளிற் குடிமை நன்று, ஆண்மை நன்று, கல்வி
நன்று
எனவும்; உயிர் போயிற்று எனவும்; உறுப்பு: கண் கெட்டது எனவும்;
மெய்: உடம்பு நலிந்தது
எனவும் அடைவே கண்டு கொள்க. என்னை?
குடிமை யாண்மை யிளமை மூப்பே
யடிமை வன்மை விருந்தே குழுவே
|