முடித்தலும் என்ற உம்மையான் முடியாதனவும் உள, அவை வருமாறு:
ஆவாழ்க என்றால் அந்தணர் கெடுக என்றாகாது.
அருத்தாபத்தியாவது,
எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே,
(தொல். கிளவி. 60)
இனி, ‘உன்னிய' என்று மிகுத்துச் சொல்லியவனதால் உயர்திணையையும் அஃறிணையையும்
கூட எண்ணி உயர்திணையாலே முடிவனவும் உள. அவை,
அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள்
மறுவாற்றுஞ் சான்றோ ரஃதாற்றார் தெருமந்து
தேய்வ ரொருமா சுறின்
(நாலடி. மேன். 1)
எனவும்,
தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னும்
இன்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பா
ரென்பாரை யோம்பே னெனில்யா னவனாக வென்றான்.
(சீவக. கோவி. 17)
அவனென்றது கட்டியங்காரனை; எனவும்,
தம்முடைய தண்ணளியுந் தாமுந்த மான்றேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க
வம்மெ னிணர வடும்புகா ளன்னங்காள்
நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்.
(சிலப். கானல். 32)
எனவும் இவை இருதிணையும் எண்ணி உயர்திணையான் முடிந்தன.
பிறவும் அன்ன.
(10)
திணை பால் மரபுகளின் வழுவமைதி
11.
உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
அயர்வில் திணைபால் மயங்கும் - செயிரில்
வழக்கும் தகுதியுமாய் வந்தொழுகும் சொற்கள்
இழுக்கல்ல முன்னை இயல்பு.
எ - ன்:
இதுவும் வழு அமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று.
|