தொழிலிற் றோன்றும் பெண்ணொழி மிகுசொல். நம்பி நூறு எருமை
உடையன் என்றல், அஃறிணையிடத்துப் பெயரிற் றோன்றும் ஆணொழி
மிகுசொல். இன்று இவ்வூரிற் பெற்றமெல்லாம் அறத்திற்குக் கறக்கும்
என்றல், அஃறிணையிடத்துத் தொழிலிற் றோன்றும் ஆணொழி மிகுசொல்.
இவை நான்கும் அஃறிணை எனக் கொள்க.
நங்கை முலையிரண்டும் வீங்கின; நம்பி தோளிரண்டும் வீங்கின
என்பன சினைச்சொல் உம்மை பெற்றன. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்;
தேவர் முப்பத்து மூவரும் வந்தார் என்பன முதற்சொல் உம்மை பெற்றன.
கண்களியாச் சென்றமர்ப்பக் கைநாஞ்சின் மேலசைஇ
ஒண்குழையொன் றொல்கி யெருத்தலைப்ப - ஒண்சுடர்ப்பூண்
நேர்மலர்த்தார் ஐவர் நீர்மை யுடைத்தரோ
நீர்மணிப்பூண் வெள்ளை நிலை
எனவும்,
எருமை நாற்கா னீர்க்கீ ழவ்வே
எனவும் உம்மை யில்லை; செய்யுளாதலால் தொக்கு நின்றது என்று அறிக.
‘எல்லாம்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், இல்லாப்
பொருளைச்
சொல்லுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்லுக. என்னை?
இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்
(தொல். கிளவி. 33)
மன்னாப் பொருளு மன்ன வியற்றே
(34)
என்பவாகலின். அவை வருமாறு: பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன்
கோயிலுள்ளும் இல்லை. அம்மிப் பித்தும் துன்னூசிக் குடரும் சக்கிரவர்த்தி
கோயிலுள்ளும் இல்லை. இவை என்றும் இல்லை எனவும் உரைக்க. (12)
மரபு வழுவாமற் காத்தல்
13. பொதுப்பிரிபால் என்ணொருமைக் கண்ணன்றிப் போகா
பொதுத்தொழிலை ஒன்றாற் புகலார் - மதித்த
ஒருபொருண்மேற் பல்பெயருண் டானால் அவற்றிற்கு
ஒருவினையே சொல்லுக ஓர்ந்து.
|