எண்ணுங் காலை யதுவதன் மரபே
(தொல். கிளவி.47)
என்றாராகலின்.
இனி, ஒரு பொருண்மேற் பலபெயர் வருமாறு: ஆசிரியன்
பேரூர்
கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் வந்தான் என்றுமாம்; அன்றி,
ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் வந்தான், செயிற்றியன் வந்தான்,
இளங்கண்ணன் வந்தான் என்றுமாம். இவ்வாறன்றி, ஆசிரியன் வந்தான்,
பேரூர் கிழான் இருந்தான், செயிற்றியன் கிடந்தான், இளங் கண்ணன்
நின்றான் என்று பலவினை கொடுத்து உரையற்க. என்னை?
ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பின் ஒன்றிட னிலவே
(தொல். கிளவி. 42)
என்றாராகலின்.
செக்கினுள் எள்பெய்து ஆட்டுவா ரில்லா மோட்டுமுது
கிழவி
மன்றத்து இருந்த வன்றிறல் இளைஞரைச் சென்று கைப்பற்றி, எந்தை வருக,
எம்மான் வருக, மைந்தன் வருக, மணாளன் வருக என்றால் இது வழுவாகற்
பாலதோ எனின், அறியாது சொன்னாய்; ஒரு பொருண்மேற் பல பெயர்
அல்லாமையால் ஆகாது.
தேமல ரலங்கற் றிருவே புகுதுக; மாமலர்க் கோதை மணாளன்
புகுதுக; காமன் புகுதுக; காளை புகுதுக; நாம எழில் விஞ்சை நம்பி புகுதுக
என்பன உவப்பினால் அமைக்க.
(13)
மரபு வழுவாமற் காத்தல்
14. ஒப்பிகந்த பல்பொருண்மேற் சொல்லும் ஒருசொல்லைத்
தப்பா வினையினஞ் சார்பினாற் - செப்புக
சாதி முதலாஞ் சிறப்புப்பேர் தன்முன்னர்
ஓதார் இயற்பெயரை உய்த்து.
எ - ன்:
வினை வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும்,
ஒருவர்க்குச்
சிறப்புப் பெயரும் இயற்பெயரும் உண்டான விடத்துச் சொல்லக் கடவ
முறையும் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
ஒவ்வாத பல பொருண்மேற் சொல்லும் ஒரு சொல்லை
வினையினானும், இனத்தினானும், சார்பினானும் அறியப்படும். ஒருவர்க்குச்
சிறப்புப் பெயரும் இயற்பெயரும்
|