உண்டானவிடத்துச் சிறப்புப் பெயரை முன்வைத்து இயற்பெயரைப்
பின்
வைத்துச் சொல்லுக எ-று.
அவை வருமாறு: மா கோல் வாள் என்றாற் பொருள் அறிய
ஒண்ணாதன. இவற்றை வினையினானும் இனத்தினானும் சார்பினானும்
அறியுமாறு மாப்பூத்தது என்றால் மாமரத்தின்மேல் நிற்கும், இது வினை.
மாவும் பலாவும் ஓங்கின என்றால் இனத்தினால் அறியப்பட்டது. விற் பற்றி
நின்று கோல் தா என்பதும், பலகை 1 பற்றி நின்று வாள் தா என்பதும்
சார்பினான் அறியப்பட்டன.
தப்பா என்று மிகுத்துச் சொல்லியவதனால் இம் மூன்றினானும்
அறியப்படாத பல பொருள் ஒரு சொற்களைக் கிளந்தறிக. அவை பலகன்று
ஓரிடத்து உளவான பொழுது நீரூட்டுக என்ற பொழுது இன்னகன்று நீரூட்டுக
என்று தெரித்துச் சொல்லுக எ-று.
வினைவே றுபடாஅப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்
(தொல். கிளவி. 54)
இனி: சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் மாறன், சேரமான்
சேரலாதன் எனவும், படைத்தலைவன் கொற்றன் எனவும் சிறப்புப்
பெயரின்பின் இயற்பெயர் வந்தவாறு. இவை மறுக்கில் வழுவா மென்று
அறிக.
சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
(தொல். கிளவி.41)
‘உய்த்து' என்று மிகுத்துச் சொல்லியவதனால் இயற்பெயர்
முன்வரிற்
பண்பு ஒட்டி வலித்தல்லது வாராது.2 அவை நலங்கிள்ளிச் சோழன்,
கொற்றப்
படைத்தலைவன் எனக் கொள்க. (14)
பண்புகொள் பெயர்க்கு மரபு வமைதியும்,
மரபு வழுவற்க என்றலும், அடையும் சினையும்
முதலுமாகிய இவற்றிற்கு மரபு வழுவாமற் காத்தலும்
15. இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுள் வழக்கேல்
இனமுண்டாய்ப் பண்புவந் தெய்தும் - புனையிழாய்
திண்ணம் அடையுஞ் சினையும் முதலுமாய்
வண்ணச் சினைச்சொல் வரும்.
---------------------
1. பலகை - கேடகம்.
2. இது மரபு வழுவமைதி என்க.
|