சொல் அதிகாரம்65

        முதலொடு குணமிரண் டடுக்குதல் வழக்கியல்
        சினையோ டடுக்குதல் செய்யு ளாறே. 

        திண்ணம்  என்று மிகுத்துச் சொல்லியவதனால் செல்லும்,
கொடுக்கும், வரும், தரும் என்பன பெயர்க்கு உரியவாம்பொழுது செல்லும்
கொடுக்கும் என்பன படர்க்கைக்கு உரியன. வரும், தரும் என்பன
தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய; ஆயினும், விரவி வரவும் பெறும்.
என்னை?

      
 செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
        நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லும்
        தன்மை முன்னிலை படர்க்கை யென்னும்
        அம்மூ விடத்து முரிய வென்ப.      
(தொல். கிளவி. 28)

        அவற்றுள்
        தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
        தன்மை முன்னிலை யாயீ ரிடத்த
        ஏனை யிரண்டு மேனை யிடத்த            
         (29.)
     

என்றா ராகலின். அவை வருமாறு: அவர்க்குச் செல்லும், அவர்க்குக்
கொடுக்குங் காணம் என்பன படர்க்கையிடத்து வந்தன. எனக்கு வருங்
காணம், எனக்குத் தருங் காணம், நினக்கு வருங் காணம், நினக்குத் தருங்
காணம் என்பன தன்மையினும் முன்னிலையினும் வந்தன. இவை விரவி
வருமாறு:  தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது  1 எனவும், ‘புனறரு
பசுங்காய்' 2 எனவும் இவை விரவி வந்தன. பிறவு
மன்ன.
                                                          
(14)

     

மொழியாக்க மரபு முற்றும்.
 

இரண்டாவது வேற்றுமை மரபு
     

வேற்றுமைகளின் பெயரும் முறையும் தொகையும்



16. காண்டகுபேர் ஐஒடுகு இன்அது கண்விளியென்
   றீண்டுரைப்பின் வேற்றுமை எட்டாகும் - மூண்டவைதாம்
   தோற்றும் பெயர்முன்னர் ஏழுந் தொடர்ந்தியலும்
   ஏற்ற பொருள்செய் யிடத்து.
------------------------
1. அகம், செய். 36. அடி. 6.
2. குறுந்தொகை செய். 292. அடி. 2.