சொல் அதிகாரம்75

நான்காவது விளி மரபு


 விளிவேற்றுமையின் பொது இலக்கணம்


24. ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
   வேறு வருதலு மெய்யியல்பும் - கூறும்
   இரண்டீற்று மூவகைப்பேர் முன்னிலைக்கண் என்றும்
   திரண்டுவிளி யேற்கும் திறம்.

     என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், விளி
மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத்தலைச் சூத்திரம்
என்னுதலிற்றோ? எனின், விளிவேற்றுமையது பொது இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

    
இ - ள்: உயிர் இறுதியும் ஒற்று இறுதியும் ஆகிய
உயர்திணைப்பெயரும் அஃறிணைப்பெயரும், விரவுப்பெயரும் முன்னிலைக்
கண் விளியேற்கு மிடத்து ஈறு திரிதலும்,  ஈற்றயல் நீடலும்,
பிரிது வந் தடைதலும், இயல்பாதலும் என நான்கு வகைப்படும் எ-று.
அவை மேற் சொல்லுதும்.

     
   இ, ஐ, உ, ஓ என்னும் உயிர்ஈற்றுப் பெயர்கள்


                  விளி ஏற்கும் வகை


25. இகரமீ காரமாம் ஐஆய்ஆம் ஏஆம்
   உகரஓ கார உயிர்கள் - பகர்விளிகள்
   அண்மை இடத்தும் அளபெடைப் பேர்க்கண்ணும்
   உண்மை இயல்பாய் உறும்.

    
எ  - ன்: இ, ஐ, உ, ஓ என்னும் நான்கு வகைப்பட்ட உயிரீற்றுப்
பெயரும் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

   
இ  - ள்: இகர ஈற்றுப் பெயர் ஈகாரமாய் விளியேற்கும்;  ஐகார
ஈற்றுப்பெயர் ஆய் ஆய் விளியேற்கும்; உகர ஈற்றுப் பெயரும் ஓகார ஈற்றுப்
பெயரும் ஏகாரமாய் விளியேற்கும், இவை நான்கும் அணியாரைக் கூவும்
இடத்து