னகர ஈற்றுப் பெயர் விளியேற்கும் ஆறு
26. அன்இறுதி ஆவாகும் அண்மைக் ககரமாம்
இன்னு முறைப்பெயரேல் ஏஆகும் - முன்னியல்பாம்
ஆனும் அளபெடையும் ஆன் ஈற்றுப் பண்புதொழில்
மான்விழி ஆய்ஆய் வரும்.
எ - ன்:
ஒற்றீற்றுப் பெயர்களுள், னகர ஈற்றுப் பெயர் விளியேற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்: அன் இறுதிப் பெயர் ஆ ஆய் விளியேற்கும்; அவை
அணியாரைக் கூவுமிடத்து அகரமாய் விளியேற்கும்; அவை
முறைப்பெயராயின் ஏகாரம் பெற்று விளியேற்கும்; ஆன் ஈற்றுப் பெயர்
இயல்பாய் விளியேற்கும்; அளபெடைப்பெயர் அளபெடுத்தபடியே இயல்பாய்
விளியேற்கும்; ஆன் ஈற்றுப் பண்புப் பெயரும் தொழிற் பெயரும் ஆய்ஆய்
விளியேற்கும் எ-று.
--------------------------------------------------------------------
பெடையை உடையதாய் அது மிக்கு வரும் பெயராகும். அங்ஙனமாகிய
பெயர் ‘தொழீஇ' என்பதேயாம். அதனைத் ‘தொழீஇயட உண்ணார்'
எனச்சிறுபஞ்சமூலத்தின் 38 - ஆம் செய்யுளில் வந்திருப்பதனால்
அறிதலாகும்.
இதன் அளபெடை மிக்கு நான்கு மாத்திரையாய்
நிற்கும், தொழீஇஇஇ என
ஐந்து மாத்திரையைக் கொண்டு நிற்றலும்
உண்டு. இஃது இங்ஙனமாதலை
முன்பு காட்டிய ‘அளபெடை மிகூஉம்'
என்னம் சூத்திரத்திற்கு அளபெடை
தன்னியல்பு மாத்திரையின்
மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும்
இகர ஈற்றுப்
பெயர் இ ஈ ஆகாது இயல்பாய் விளியேற்கும் செயற்கையை
உடையவாம் என்று கூறிய சேனாவரையர் உரையினானும்,
அளபெடை
மிகூஉம் இகர இறுபெயர் - அளபெடை தன் இயல்பு
மாத்திரையின் மிக்கு
நான்கு மாத்திரை பெற்று நிற்கும். இகர ஈற்றுப்
பெயர், இயற்கைய ஆகும்
செயற்கைய என்ப - இ, ஈ ஆகாது
இயல்பாய் விளி ஏற்கும் செயற்கையை
உடைய என்று கூறுவர்
ஆசிரியர் என நச்சினார்க்கினியர் கூறிய
உரையினானும் அறிக. இது,
தொழில் செய்கின்றவள் என்னும் பொருள்தரும்
சொல் என்பர்
நச்சினார்க்கினியர். ஈண்டுக் கலித்தொகை முல்லைக்கலி 3-
ஆம் செய்யுளின் 44-ஆம் அடியில் வந்துள்ள தொழீஇஇ என்பதற்கு,
(644-ஆம் பக்கத்தில்)
சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப்
பண்டிதராய்
இருந்த அனந்த ராமய்யர் அவர்கள் எழுதிய
அடிக்குறிப்பையும், மே. வீ.
வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் தாம்
பரிசோதித்துப் பதிப்பித்த
நச்சினார்க்கினியர் உரையோடு கூடிய
சொல்லதிகாரத்தின் மேற்படி சூத்திர
உரையின்பின் (135 ஆம்
பக்கத்தில்) அவர்கள் எழுதிய அடிக்குறிப்பையும்
ஈண்டு நோக்குக.
|