விளியேற்கும்; ரகார ஈற்று அளபெடைப்பெயர்கள் இயல்பாய் விளியேற்கும்.
சொல்லப்பட்ட எவ்வீற்றுப் பெயர்களினும் விளியேலாதனவும் உள எ-று.
அவை வருமாறு: அந்தணர் - அந்தணீர் என்றும், குறவர் - குறவீர்
என்றும் அர் ஈராய் விளியேற்றது. சான்றார் - சான்றீர் என்றும், மூத்தார் -
மூத்தீர் என்றும், பெரியார் - பெரியீர் என்றும், ஆர் ஈராய் விளியேற்றது.
செட்டியார் - செட்டியீரே என்றும், கணியார் - கணியீரே என்றும் ஈரோடு
ஏகாரம் பெற்று விளியேற்றன.
‘ஓங்கு' என்று மிகுத்துச் சொல்லியவதனால், பண்பும் தொழிலும்
ஆர்
ஈறாயின், ஈரோடு ஏகாரம் பெற்று விளியேற்கும் எனக் கொள்க. கரியார் -
கரியீரே, உண்டார் - உண்டீரே எனப் பண்பும் தொழிலும் ஈரோடு ஏகாரம்
பெற்று விளியேற்றன.
மகாஅர், சிறாஅர் என்பன அளபெடுத்தபடியே இயல்பாய்
விளியேற்றன. பிறவும் அன்ன.
தான், அவன், இவன், உவன், யான், எவன், யாவன், எனவும்; அவர்,
இவர், உவர், எவர், யாவர் எனவும்; அவள், இவள், உவள், எவள், யாவள்
எனவும்; நீ, நீர், எனவும் இவை விளியேலாத பெயர் என்றறிக. பிறவும்
அன்ன.
லகர ளகர ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்கும் வகை
28, ஈற்றயல் நீடும் லளக்கள்தாம் ஏகாரம்
தோற்று முறைப்பெயர்கள் துன்னுங்கால் - ஆற்ற
அயல்நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும்
இயல்பாம் விளிக்கு மிடத்து.
எ - ன்:
லகாரவீற்றுப் பெயரும், ளகாரவீற்றுப் பெயரும்
விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
லகார ஈறும், ளகார ஈறும் விளியேற்குமிடத்து ஈற்று
எழுத்தின் அயல் எழுத்தாகிய குற்றுயிர் நெட்டுயிராய் விளியேற்கும்; அவை
முறைப்பெயராயின் ஏகாரம் பெற்று விளியேற்கும்; முன்பே அயல் நெடிதாம்
பெயராயின் இயல்பாய் விளியேற்கும்; அளபெடைப்
|