அரங்ங்கம், முழஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று,
குரவ்வ்வை, அரய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள் வரஃஃகு இவை
குறிலிணைக்கீழ் அளபெழுந்தன.
இனி, உயிரளபெடையாவன, உயிருள் நெட்டெழுத்தேழும்
அளபெடுக்கும் அவை அளபெடுக்குமிடத்துத் தனிநிலை, முதனிலை,
இடைநிலை, இறுதிநிலை யென்னும் நான்கனோடும் உறழ இருபத்தெட்டாம்.
என்னை?
குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே
தொல்.மொழிமரபு. 8.
ஐ ஒள வென்னு மாயீ ரெழுத்திற்
கிகர வுகர மிசைநிறை வாகும்
9.
என்றாகலின்.
வ - று:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பன
தனிநிலை அளபெடை.
மாஅரி, வீஇரம், கூஉரை ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஒளஉவை இவை
முதனிலை அளபெடை.
படாஅகை, பரீஇயம், கழூஉமணி, பரேஎரம், வளைஇயம், உரோஒசம்,
அநௌஉகம் இவை இடைநிலை அளபெடை.
பலாஅ, குரீஇ, கழூஉ, விலேஎ, விரைஇ, உலோஒ, அநௌஉ இவை
இறுதிநிலை அளபெடை. பிறவும் அன்ன. (3)
குற்றியலுகரமும், குற்றியலிகரமும், ஐகாரக்குறுக்கமும்,
ஒளகாரக்குறுக்கமும், நிலைமொழியீற்று மெய்யின்பின்
உயிர்வரின் ஏறி முடியும் என்பதும்
4. தொடர்நெடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்
படைய வருமிகர மன்றி---மடநல்லாய்
மும்மையிடத் தையௌவுங் குன்றுமுன் னொற்றுண்டேற்
செம்மையுயிர் ஏறுஞ் செறிந்து.
என்பது குற்றியலுகரமும், குற்றியலிகரமும், ஐகாரக்குறுக்கமும்,
ஒளகாரக்குறுக்கமும் ஆமாறும், புள்ளியீற்று நிலைமொழியின்பின் உயிர்வரின்
ஏறி முடியும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.
|