82நேமி நாதம்

திசைச்சொல், இடைத்திசைச்சொல், உரித்திசைச்சொல் எனவும்;
பெயர்வடசொல் வினைவடசொல், இடைவடசொல், உரிவடசொல் எனவும்
வரும். இவற்றுட் பெயர்ச்சொல் உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர்,
விரவுப்பெயர் என மூன்று கூறாம் எ-று.

என்னை?

இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே

     

(தொல். எச். 1)

     

அவற்றுள்
இயற்சொற் றாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே

     

     

     

(தொல். எச். 2)

     

ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொற் கிளவி.

     

     

(தொல். எச். 3)

     

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்
தங்குறிப் பினவே திசைசொற் கிளவி

     

(தொல். எச். 4)

     

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

     

(தொல். எச். 5)

     

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்     

(தொல். எச். 6)


என்பனவற்றான் இயற்சொன் முதல் நான்கும் ஆமாறு உணர்ந்து கொள்க.

 
    பெயரெனப் படுபவை தெரியுங் காலை
     உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும்
     ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும்
     அம்மூ வுருபின தோன்ற லாறே          
 (தொல். பெய. 6)

     

என்பவாகலின்.