84நேமி நாதம்

     எவன், எவள், எவர், யாவன், யாவர் என இவை வினாப்பெயர்.

     பொன்னனான், பொன்னனாள், பொன்னனார் என இவை
உவமைப்பெயர்.

     கரியான், கரியாள், கரியார், நெடியான், நெடியாள், நெடியார் என
இவை பண்புப்பெயர்.

     இவை ன, ள, ர ஈறாகிய நான்கு வகைப் பெயருமெனக் கொள்க.

     இனி எண்ணியற் பெயர் - ஒருவர், இருவர், மூவர், நால்வர் என
இவை முதலானவை.

    அம்பர்கிழான், வல்லங்கிழான் என இவை நிலப்பெயர்.

    அவையகத்தார், அத்திகோசத்தார், மணிக்கிராமத்தார் என இவை
கூடியற்பெயர்.

    மகத்தான், மகத்தாள், மகத்தார், நாலாண்டையான், நாலாண்டையாள்,
நாலாண்டையார் என இவை காலப்பெயர்.

    செங்கோன், செவ்வண்ணன் என இவை குலப்பெயர்.
       

    உண்டான், உண்டாள், உண்டார் என இவை தொழிற்பெயர்.

     ஆடூஉ மகடூஉ என்பன உயர்திணைப்படர்க்கைப் பெயர் என
அறிக.                                                    
(2) 
       

இதுவும் அது
       

32, பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த
   இகரஐ கார இறுதி - இகரமிறுஞ்
   சாதிப்பெண் பேர்மாந்தர் மக்களுந் தன்மையுடன்
   ஆதி உயர்திணைப்பேர் ஆம்.

    
எ - ன்:  உயர்திணைப் பெயர் ஒழிவு கூறுதலை உணர்த்துதல்
நுதலிற்று.

 
    
இ - ள்: பல்லோரைக் குறி்த்துவரும் முறைப்பெயரும்,
சினைப்பெயரும், நம்மூர்ந்து வரும் இகர ஐகார ஈற்றுப்பெயரும், இகர ஈற்றுச்
சாதிப் பெண்பெயரும், மாந்தர் மக்கள் என்னும் பெயரும், தன்மைப்
பெயரும், உயர்திணைப் பெயராம் எ-று.