சொல் அதிகாரம்85

அவை வருமாறு:


   
 தந்தையர், தாயார், இவை முறைப்பெயர்.
     பெருங்காலர், பெருங்கையர் இவை சினைப்பெயர்.
     நம்பி, நங்கை இவை நம்மூர்ந்து வந்த இகர ஐகாரப்பெயர்.
     பார்ப்பனி, குறத்தி, மறத்தி இவை இகர ஈற்றுச் சாதிப் பெண்


பெயர்.


    
மாந்தர், மக்கள் என்பன அவை.
     யான், யாம், நாம் இவை தன்மைப்பெயர்.
     இவை உயர்திணைப் பெயராம் என்றவாறு.
                                                                       
     (3)

அஃறிணைப்பேர் ஆமாறு

33. ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர்
    ஓதியஎண் ணின்பேர் உவமைப்பேர் - தீதிலாச்
    சாதிப்பேர் சார்ந்த வினாஉறுப்பின் பேர்தலத்தோர்
    ஓதிய அஃறிணைக்காம் உற்று.


    
எ - ன்:  அஃறிணைப்பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

    
இ - ள்:  சுட்டு முதலாகிய உகர ஐகார ஈற்றுப் பெயரும், எண்ணின்
பெயரும், உவமைப் பெயரும், சாதிப் பெயரும், வினாப் பெயரும், உறுப்பின்
பெயரும் இவை அஃறிணைப்பெயராம் எ-று.

    அவை வருமாறு:  அது, இது, உது, அவை, இவை, உவை, இவை உகர
ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர்.

    ஒன்று, இரண்டு, மூன்று இவை எண்ணின் பெயர்.


    பொன்னன்னது, பொன்னன்னவை இவை உவமைப்பெயர்.


    நாய், நரி, புல்வாய் இவை சாதிப் பெயர்.


    எது, எவை, யாது, யாவை இவை வினாப்பெயர்.


    பெருங்கோட்டது, பெருங்கோட்டவை இவை உறுப்பின் பெயர்.
இவை அஃறிணைப் படர்க்கைப் பெயராமாறு அடைவே கண்டு கொள்க.
(4)