94நேமி நாதம்

      அர்: உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர்; ஆர்: உண்டார்,
உண்ணாநின்றார், உண்பார்; கரியர் செய்யர், கரியார் செய்யார்; உண்ப
தின்ப என அர் ஆர் ப பல்லோர் படர்க்கையாயின.

     யார் அவன்? யார் அவள்? யார் அவர்? என யார் என்னும் சொல்
மூன்று பாற்கும் ஏற்றவாறு கண்டுகொள்க.

      யாஅ ரென்னும் வினாவின் கிளவி
     அத்திணை மருங்கின் முப்பாற்கு முரி்த்தே 

                                       (தொல். வினை. 13)


என்றாராகலின்.


     ஒருவனையும் ஒருவர் வந்தா ரென்ப; ஒருத்தியையும் ஒருவர் வந்தா
ரென்ப; அதனால் ஒருவர் என்பது இருபாற்கும் உரித்தானவாறு கண்டு
கொள்க. என்னை?

      ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி
      யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை 
      தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும் 
  (தொல். பெய. 36, 37)


என்றாராகலின்.

     வினைச்சொல் அதிகாரத்தே பெயர்ச்சொல் ஆராய்ந்தது என்னையோ?
எனின், முப்பாற்கும் உரிய சொல்லாய்ந்த அடைவே இருபாற்கும் உரியசொல்
ஆராய்ந்தான்; அது


      ஒப்பின் முடித்த லப்பொரு ளாகும்   
     

என்னும் தந்திரவுத்தியாற் பெறும் என்றவாறு.

     உயர்திணைத் தன்மைவினையைச் சொல்லி முன்னிலைவினையைச்
சொல்லாதே படர்க்கைவினையைச் சொல்லியது என்னையோ? எனின், அவை
இரண்டு திணைக்கும் விரவுவினை ஆதலாற் போக்கிச் சொல்லுதும்.                     (3)
     

படர்க்கை வினைமுற்று


42. சொன்ன அ ஆவத் துடுறுவும் அஃறிணையின்
   பன்மை ஒருமைப் படர்க்கையாம் - பின்னை
   எவன்என் வினாவவ்  விருபாற் பொருட்குஞ்
   சிவணுதலாம் தொன்னூற் றெளிவு.