சொல் அதிகாரம்99

45. ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
   வேறில்லை யுண்டு வியங்கோளுந் - தேறும்
   இடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும்
   உடனொன்றிச் சேறலும் உண்டு.


   
எ - ன்:  இதுவும் விரவுவினையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

   
இ - ள்:  நிலமும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதலும்
வினையும் என்னும் ஆறிடத்தும் நடக்கும், செய்யும் செய்த என்னும்
பெயரெச்சம் இரண்டும். என்னை?
   

          நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
     வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட
     வவ்வறு பொருட்கு மோரன்ன வுரிமைய
     செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே   
(தொல். வினை. 37)


என்றாராகலின்.

     அன்று, அல்ல, வேறு, இல்லை, உண்டு, வியங்கோள் என்று
சொல்லப்பட்ட ஆறும் தன்மை, முன்னிலை, படர்க்கை யென்னும்
மூன்றிடத்தும் இருதிணை ஐம்பாலோடு்ம் நடைபெற்றுச் செல்லும் எ-று.

    அவற்றுள், செய்யும் என்னும் பெயரெச்சம் வருமாறு: நிலம் - யான்
உண்ணும் இல், யாம்   உண்ணும் இல், நாம் உண்ணும் இல், நீ உண்ணும்
இல், நீயிர் உண்ணும் இல், அவன் உண்ணும் இல், அவள் உண்ணும் இல்,
அவர் உண்ணும் இல், அஃது உண்ணும் இல், அவை உண்ணும் இல்
எனவும்;

    பொருள் - யான் செய்யும் பொருள், யாம் செய்யும் பொருள், நாம்
செய்யும் பொருள், நீ செய்யும் பொருள், நீயிர் செய்யும் பொருள், அவன்
செய்யும் பொருள், அவள் செய்யும் பொருள், அவர் செய்யும் பொருள், அது
செய்யும் பொருள், அவை செய்யும் பொருள், எனவும்:
 
    காலம் - யான் வருங் காலை, யாம் வருங் காலை, நாம் வருங் காலை,
நீ வருங் காலை, நீயிர் வருங் காலை, அவன் வருங் காலை, அவள்