படச் சுருக்கிக் கேட்போர்மனத் துள்ளுருவவுரைப்பது, தொகை யெனக் கொள்க. இனி யுதாரணங்காட்டுதும். எ-று. (1) | 164. | பன்மனந் துணியவுட் படுத்த றுணிவாந் துன்னிய வணித்தொகைத் துணிவிற் குரித்தே. | | (இ-ள்.) துணிவா மாறுணர்த்துதும். மேற்கூறியபடி விரித்தவற்றைச் சுருங்கக்காட்டி வருகையிற் கருதியபயனை யடையும் பொருட்டு மற்றவர் துணிவதற்கேற்ப வுரைப்பது துணிவெனப்படும். ஆகையிற் குறித்த தத்தம் பொருட்குரித்தாகக் கேட்பவர் துயரத்திரங்கவுஞ் சினத்திலெரியவுந் தீமைக்கஞ்சவு மொன்றனை யொருவவு மற்றொன்றனை மருவவு மல்லவை வெறுப்பவு நல்லவை விரும்புவ மற்றைப் பற்றுதல்கிளப்பிற் கேட்டோர் மனமே தன்வசமாக்கி யுழுது வித்தியபைங்கூழ் பழுத்துழிக்கொய்து தெளித்த செந்நெல் கொள்வது போலப் பதிகமுதலிய வழியாற்றேடிய பயனைத்தருவது துணிவென்றுணர்க. ஆகையிலதற்கதற்கேற்ப மடக்கு வினா விபாவனை முதலிய வலங்காரங்க ளொன்றன்மேலொன்றை யடுக்கி நடக்குந் துணிவெனக்கொள்க. சிந்தாமணி மேற்காட்டிய துறவிடத்துப்பலவற்றை விரித்து நெடிதாயுரைத்தபின்பு, தொகையாய்க் கூறியவாறு:- "அல்லி த்தாளற்றபோ மறாதநூலதனைப்போலத், தொல்லைத் தம்முடம்பு நீங்கத் தீவினைதொடர்ந்து நீங்காப், புல்லிக்கொண்டு யிரைச்சூழ்ந்து புக்குழிபுக்குப்பின்னின், றெல்லையிறுன்பவெந்தீச் சுட்டெரித்திடுங்க ளென்றே." - "அறவியமனத்தராகி யாருயிர்க்கருளைச்செய்யிற், பறவையுநிழலும்போலப் பழவினையுயிரோடோடி, மறவியொன்றானுமின்றி மனத்ததே சுரக்குநல்லான், கறவையிற்கறக்குந்தன்னாற் காமுறப்பட்டவெல்லாம்." எனவிவைபலவு முரைத்துத் தொகையாய்க் கூறியவாறு. - "பொய்யொடுமிடைந்த பொருளாசையுருளாய, மைபடுவினைத்துகள் வழங்குநெறிமாயஞ், செய்தபொருள் பெய்தகலஞ் செம்மைசுடு செந்தீக், கைதவ னுனித்த கவறாட லொழிகென்றான்" 261. என்பதிவையும் பலவுங் கூறித் துணிவு வழங்கினவாறு காண்க. அங்ஙனந் தேம்பாவணியிற் காமம்விளைவிக்குந் தீயவினைக் காட்டி யதனைவிடற்கு வாமனுக்குறுதி பலவற்றையும் பலதிணை வகையால் விரிவாய்க்கூறிய பின்னர்த் தொகையுந் துணிவுமாகச் சொன்னவாறு. - "ஐம்பொறிப் பகைகண்டஞ்சி யடக்கலினாமைபோல் வாய், வெம்பொறிப் புதவையோர்ந்து வினைபகை சிறிதென்றெண்ணல், பைம்பொறிப் பாந்தடங் கூர்ப்பல்பட மதநீர்க்குன்றிற், செம்பொறிப் புகைக்கண்யானைச் சிதைந் துயிர்மாளுமன்றோ." - "பிரிந்ததென்றொழித்தபாவம் பெறுமிடத் தணுகேல்வேலோ, யரிந்ததென் றுறங்குமாசை யமைதியால் விழித்துக்கொல்லு, மெரிந்தநின் காமத்தீயை யீற்றறவலித்ததென்னேல், கரிந்ததென்றிருந்த பற்காற் கான்முகத்தெரியுந்தீயே." - "குலம்புரி கொடியபேய்கள் கொலைத் தொழிற் கருவிசூழ்ந்து, சலம்புரி வலையைவைக்கத் தளைப்படிற் பிரிதலாற்றா, |
|
|