(இ-ள்.) இணைக்குற ளாசிரியப்பா வாமாறுணர்த்துதும். முதலடியு மீற்றடியு மளவடியாகி யொழிந்த நடுவிரண்டடியும் பலவடியுங் குறளடி யாகவுஞ் சிந்தடியாகவும் வருவன விணைக்குற ளாசிரியப்பா வெனப்ப டும். (வ-று.) திருக்காவலூர்க்கலம்பகம். - "வாழிய வும்பர் வணங்கிய வணங்கே, வாழிவா னொளியே, வாழிபா ருயிரே, யாதியை யீன்றனை, நீதியை யூன்றினை, பானொளி யணிந்தனை, மீனொளி புனைந்தனை, குறைமதி மிதித்தனை, மறைமதி விதித்தனை, மேதினி காத்தனை, தீதினை தாற்றினை, கதிக்கத வாயினை, திதிக்கனி வாயினை, வானோர் களித்தனை, யீனோ ரளித்தனை, தொழுமுளத் துள்ளுறை சோதியை, யழுமுளத் தாதர வோதியை, நீரகத் தம்புய நேரினை, யாரகத் தம்பர நீரினை, வானவர் வாழ்த்த வானமாண், டீனவர் வாழலிங் கெய்தினை, யாவ லூர்வழி யாற்றிருக், காவ லூரருங் காதலே, யன்புணர் நீயிவ ணமைந்தபின், பொன்புண ருலகொடு பூவுல கொத்ததே." என முதற்கண்ணு மீற்றின்கண்ணு மளவடிவந் திடைய குறளடி பலவுஞ் சிந்தடி பலவும் வந்தவாறு காண்க. - யாப்பருங்கலம். - "இணைக்குற ளிடைபல குறைந்திறி லியல்பே." எ-று. (7) | 226. | நிலமண்டிலத் தெங்கு நீங்கா வளவடி யடிமறி மண்டில மந்நடைத் தாகி யடிமா றினுந்தா னழியா நிலைத்தே. | | (இ-ள்.) நிலமண்டில வாசிரியப்பாவு மடிமறி மண்டில வாசிரியப் பாவு மாமாறுணர்த்துதும். ஆகையி லெல்லாவடியு மளவடியாக வருவன நிலமண்டில வாசிரியப்பா வெனப்படும். (வ-று.) "சீத மதிக்குடை சேர்ந்தறங் கிடப்பத், தாதவிழ் தாரான் றனிக்கோ றாங்கப், போதவிழ் நிழற் பொழிற் புலியுட னுழைபகைப், பேதநீத் துலவும் பெரும்புகழ் நாடே." எ-ம். புறநிலை யன்றியு மெல்லாவடியு மளவடியாக வருவதல்லாதே முதலடி யீற்றடி யிடையடி பலவுமாறி யுச்சரிப்பினு மோசையும் பொருளும் வழுவாது வருவன அடிமறி மண்டில வாசிரியப்பா வெனப்படும். (வ-று.) "நீரிடை நுரையினேர் கெடுமிளை மையே, சாரிடை மின்னற் கடிதிரும் புகழே, தேரிடை யுருளிற் செல்வ மாறுமே, தாரிடை மதுவினிற் றவிர்ந்தொழி யின்பமே. எ-ம். புறநிலை. - காரிகை. - "கடையயற் பாதமுச் சீர்வரி னேரி சைக் காமருசீ, ரிடைபல குன்றினிணைக்குறளெல்லா வடியு மொத்து,நடை பெறு மாயி னிலமண் டிலநடு வாதி யந்தத், தடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே." - யாப்பருங்கலம். - "ஒத்த வடியின தாகியு மொற்றி, நிற்பவு மென்னு நிலமண் டிலமே." இவைமேற்கோள். எ-று. (8) | 227. | கலியொலி துள்ளல் கலித்தளை பிறவும் வெண்சீர் பிறவும் விரவிய வளவடி தன்னா னடக்குந் தன்மைத் தாகி | |
|
|