பொருளணியியல்93

இப்பாடலில் அச்சத்திற்குக் காரணமான குற்றத்தைத் தன்பால் இல்லையென விலக்கியிருத்தலின், இது காரண விலக்காயிற்று.

4. காரிய விலக்கு

எ-டு: 'மன்னவர் சேயர் மயிலகவி யாடலும்
பொன்னலருங் கொன்றையும் பூந்தளவின்- மென்மலரும்
மின்னுயிரா நீண்முகிலும் மெய்யென்று கொள்வதேல்
என்னுயிரோ இன்னு முளது.

இ-ள்: நம் காதலர் வினை கருதிச் சேய்த்தாகிய நாட்டுளராக, மயிலினங்கள் கூவி யாடுதலும், கொன்றைகள் பொன்போல மலர்தலும், அழகிய முல்லையின் மிருதுவாகிய மலரும், மின்னைலைக் கொடுக்கின்ற நெடிய மேகமுமாகிய இவை மெய்யென்று கொள்வோமாயின், என் உயிரோ இன்னும் உடலோடு பொருந்தி நின்றது எ-று.

இதனுள் காரியம், உயிரில்லாது ஆதல்.

வி-ரை:இது தலை மகள் பருவ வரவு கண்டு கூறியதாகும். இப்பாடலில் தலைமகனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்குக்கார்கால வரவாகிய காரணம் நிகழ்ந்தும், உயிர் போதலாகிய காரியம் நிகழவில்லை எனக் கூறியிருத்தலின், இது காரிய விலக்காயிற்று.

அதன் வகை

44. வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி
துணைசெயல் முயற்றி பரவசம் உபாயம்
கையறல் உடன்படல் வெகுளி யிரங்கல்
ஐயம் என்றாங்(கு) அறிந்தனர் கொளலே.

எ-ன், அவ்விலக்கு என்னும் அலங்காரத்தை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: வன்சொல் விலக்கும், வாழ்த்து விலக்கும், தலைமை விலக்கும். இகழ்ச்சி விலக்கும், துணைசெயல் விலக்கும், முயற்சி விலக்கும், பரவச விலக்கும்,உபாய விலக்கும்,கையறல் விலக்கும், உடன்படல் விலக்கும், வெகுளி விலக்கும், இரங்கல் விலக்கும், ஐய விலக்கும் என்று சொல்லிய பதின்மூன்று பாகுபாட்டை யுடையது என்று அறிந்து கோடலையுடைத்து அவ்விலக்கு அலங்காரம் எ-று.

அவற்றுள், (1) வன்சொல் விலக்கு என்பது வன்சொற். சொல்லி விலக்குவது.

எ-டு: `மெய்யே பொருள்மேற் பிரிதியேல் வேறொரு
தையலை நாடத் தகும்நினக்கு - நெய்யிலைவேல்
வள்ளல் பிரிவற்றம் பார்த்தெங்கள் வாழ்நாளைக்
கொள்ள உழலுமாம் கூற்று'

இ-ள்: ஒருதலையாய்ப் பொருள்மேல் ஆசையால் பிரிதியேல். இப்போழுதே உனக்கொரு மனையாளைத் தேடத்தகுவதா யிருந்தது; நெய்யை யுடைத்தாகிய வேலையுடைய வள்ளலே ! நீ பிரிந்த அவகாசத்தைப் பார்த்து, அப்பொழுதே எங்கள் வாழ்நாளைக் கொள்வதாக நினைத்துத்திரியாநின்றது கூற்றம் எ-று.