தொடக்கம் | ||
பெருங்காப்பியம்
|
||
8. | அவற்றுள், பெருங்காப்பிய நிலை பேசும் காலை , வாழ்த்து , வணக்கம் , வருபொருள் , இவற்றின் ஒன்று ஏற்பு உடைத்து ஆகி, முன்வரவு இயன்று , நால்பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகித். தன் நிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய், மலை , கடல் , நாடு , வளநகர் , பருவம் , இரு சுடர்த் தோற்றம் , என்று இனையன புனைந்து , நல் மணம் புணர்தல் , பொன்முடி கவித்தல் , பூம்பொழில் நுகர்தல் , புனல் விளையாடல், தேன் பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் , புலவியில் புலத்தல் , கலவியில் களித்தல் , என்று இன்னன புனைந்த நல் நடைத்து ஆகி , மந்திரம் , தூது , செலவு , இகல் , வென்றி , சந்தியில் தொடர்ந்து , சருக்கம் , இலம்பகம் , பரிச்சேதம் , என்னும் பான்மையின் விளங்கி, நெருங்கிய சுவையும் , பாவமும் , விரும்பக் கற்றோர் புனையும் பெற்றியது என்ப . |
உரை |