உவமை வகை
 
32. அதுவே,
விரியே , தொகையே, இதரவிதரம்,
உரைபெறு சமுச்சயம் , உண்மை, மறுபொருள் ,
புகழ்தல் , நிந்தை , நியமம் , அநியமம் .
ஐயம் , தெரி தரு தேற்றம் , இன்சொல் ,
எய்திய விபரீதம் , இயம்புதல் வேட்கை,
பலபொருள் , விகாரம் , மோகம் , அபூதம் ,
பலவயின் போலி , ஒருவயின் போலி ,
கூடா உவமை , பொதுநீங்கு உவமை ,
மாலை, என்னும் பாலது ஆகும்.
உரை
   
33. அற்புதம் , சிலேடை , அதிசயம் , விரோதம்,
ஒப்புமைக் கூட்டம் , தற்குறிப்பேற்றம்,
விலக்கே , ஏது என வேண்டவும்படுமே.
உரை
   
34. மிகுதலும் , குறைதலும் , தாழ்தலும் , உயர்தலும் ,
பால் மாறுபடுதலும் , பாகுபாடு உடைய.
உரை