உருவக அணி
 
36. உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து,
ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும்.
உரை
   
37. தொகையே , விரியே , தொகைவிரி , எனாஅ;
இயைபே , இயைபுஇலி ,வியனிலை , எனாஅச்
சிறப்பே , விரூபகம் , சமாதானம் , எனாஅ ;
உருவகம் , ஏகம் , அநேகாங்கம் எனாஅ ;
முற்றே , அவயவம் , அவயவி, எனாஇச்
சொற்ற ஐம்- மூன்றும் மற்று அதன் விரியே.
உரை
   
38. உவமை , ஏது , வேற்றுமை, விலக்கே ,
அவநுதி , சிலேடை என்று அவற்றொடும் வருமே.
உரை
   
39. உருவகம் , உவமை ,என இரு திறத்தவும்
நிரம்ப உணர்த்தும் வரம்பு தமக்கு இன்மையின் .
கூறிய நெறியின் வேறுபட வருபவை ,
தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே.
உரை