தொடக்கம் | ||
வேற்றுப்பொருள் வைப்பு அணி
|
||
47. | முன் ஒன்று தொடங்கி , மற்றது முடித்தற்குப் பின் ஒரு பொருளை , உலகு அறி பெற்றி ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பே. |
உரை |
48. | முழுவதும் சேறல், ஒருவழிச் சேறல், முரணித் தோன்றல் ,சிலேடையின் முடித்தல், கூடா இயற்கை, கூடும் இயற்கை, இருமை இயற்கை,விபரீதப்படுத்தல் ,என்று இன்னவை எட்டும் அதனது இயல்பே. |
உரை |