சொல் அணி இயல்
 
92. எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும்
பெயர்த்தும் வேறு பொருள் தரின் மடக்கு எனும் பெயர்த்தே.
உரை
   
93. அதுதான்,
ஓர் அடி முதலா நான்கு அடி காறும்
சேரும் என்ப தௌ¤ந்திசினோரே.
உரை
   
94. ஆதி , இடை, கடை ; ஆதியோடு இடை , கடை ;
இடையொடு , கடை முழுது , என எழு வகைத்தே .
உரை
   
95. ஓர் அடி ஒழிந்தன தேரும் காலை
இணை முதல் விகற்பம் ஏழும் , நான்கும் ,
அடைவுறும் பெற்றியின் அறியத் தோன்றும் .
உரை
   
96. அடி முழுதும் மடக்கலும் ஆங்கு அதன் சிறப்பே . உரை
   
97. ஓர் எழுத்து மடக்கலும் உரித்து என மொழிப. உரை