வாழுக்களின் வகை
 
99. பிரிபொருள் சொற்றொடர் , மாறுபடு பொருள்மொழி ,
மொழிந்தது மொழிவே , கவர் படு பொருள்மொழி ,
நிரல் நிறை வழுவே, சொல் வழு, யதி வழு ,
செய்யுள் வழுவொடு , சந்தி வழு , என
எய்திய ஒன்பதும் ; இடனே காலம் ,
கலையே , உலகம் , நியாயம் , ஆகம
மலைவும் உள்ளுறுத்தவும் வரைந்தனர் புலவர் .
உரை
   
100. மேற்கோள் , ஏது , எடுத்துக்காட்டு , என
ஆற்றுளிக் கிளக்கும் அவற்றது வழுநிலை,
நிரம்ப உணர்த்த வரம்பில என்ப .
உரை