பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
நாற்பொருட் பயன்

 
10அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் - தருமமும் அர்த்தமுங் காமமும் மோட்சம் அடைதலும் ஆகிய நான்கும் , நூல்பயன் - நூலால் எய்தும் பிரயோசனமாம் .