எழுத்தியல்

முதனிலை
பொதுவிதியுட் சிறப்புவிதி

 
104அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அ ஆ உ ஊ ஓ ஒள (ஒடு)- அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள என்னும் ஆறு உயிரோடும் , ய முதல்- யகர மெய் (சொல்லுக்கு) முதலாகும்.

மேலைச் சூத்திரத்தின் ' ஒடு' இங்கே வருவிக்கப்பட்டது.

யவனர் , யானை , யுகம் , யூகி , யோகி , யௌவனம் எனவரும் .