எழுத்தியல்

முதனிலை
பொதுவிதியுட் சிறப்புவிதி

 
105அ ஆ எ ஒவ்வோ டாகு ஞம்முதல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அ, ஆ, எ ஒவ்வோடு - அ, ஆ, எ, ஒ என்னும் நான்கு உயிரோடும் , ஞ முதல் ஆகும்-ஞகர மெய் (சொல்லுக்கு) முதலாகும் .

ஞமலி , ஞாலம் , ஞெகிழி , ஞொள்கிற்று என வரும் .