எழுத்தியல்

போலி
மொழிமுதல் போலியும் மொழி இடைப் போலியும்

 
123அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முதல் இடை-சொல்லுக்கு முதலிலும் நடு விலும் , அ ஐ ஒக்கும்-அகரமும் ஐகாரமும் வேறுபாடின்றி ஒத்து நடக்கும் , ச ஞ ய முன்-சகர ஞகர யகரங்களுக்கு முன் வருமாயின்.

இங்கே 'முன்' என்றது , கால முன் எனக் கொள்க .

பசல்-பைசல், மஞ்சு-மைஞ்சு, மயல்-மையல் எனவும் ,
அமச்சு - அமைச்சு , இலஞ்சி - இலைஞ்சி , அரயர் - அரையர் எனவும் வரும் .