அது முன் வரும் அன்று - அது என்னும் சுட்டுப்பெயர் முன் வரும் அன்று என்னும் வினைக் குறிப்பு முற்று , தூக்கின் ஆன்று ஆம் - பாட்டினிடத்து முதல் நீளும். அது + அன்று = அதான்று என வரும். ஆன்றேயாம் என இயல்பை விலக்காமையால், அதுவன்று , அதன்று எனவும் வரும். அன்றான்றாம் என்றது எய்தாதது எய்துவித்தல்.
|