உருபு புணரியல்

சாரியை

சரியைகள் இவை என்பது

 
244அன் ஆன் இன் அல் அற்றிற் றத்தம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிறவும் பொதுச்சா ரியையே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அன் ...ன = அன் முதல் னகர மெய் ஈறாகச் சொல்லப்பட்ட பதினேழும் , இன்ன பிறவும் = இவை போல் வன பிறவும் , பொதுச் சாரியை - விகுதி பதம் உருபு என்னும் மூன்று புணர்ச்சிகளிலும் தனி மொழிகளிலும் வருதலினாலே பொதுச்சாரியை ஆகும் .

அன் = ஒன்றன்கூட்டம் , ஆன் - ஒருபாற்கு , இன் - வண்டின் கால் , அல் = தொடையல் , அற்று = பலவற்றை , இற்று = பதிற்றுப் பத்து , அத்து - மரத்திலை , அம் = மன்றம் , தம் - எல்லார் தம்மையும் , நம் = எல்லா நம்மையும் , நும் = எல்லீர் நும்மையும் , ஏ - கலனே தூணி , அ = நடந்தது , உ = சாத்தனுக்கு , ஐ = ஏற்றை , கு = உய்குவை , ன் = ஆன் என முறையே காண்க .

இன்ன பிறவும் என்றதனால் , தன் = அவன்றனை , தான் = அவன்றான் , தாம் = அவர்தாம் , ஆம் = புற்றாஞ் சோறு , ஆ = இல்லாப்பொருள் , து = செய்துகொண்டான் என்பனவும் , இன்னும் வருவன உளவாயின் அவையும் கொள்க .