பெயரியல்

வேற்றுமை
விளி உருபுகளுக்குப் புறனடை

 
313அண்மையி னியல்புமீ றழிவுஞ் சேய்மையின்
அளபும் புலம்பி னோவு மாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முன் சொல்லப்பட்ட விளியுருபுகளுள் = இயல்பும் ஈறு அழிவும் அண்மையின் = இயல்பாதலும் ஈறு கெடுதலும் சமீப விளிக்கண்ணும் , அளபு சேய்மையினும் = அளபெடுத்தல் தூர விளிக்கண்ணும் , ஓ புலம்பினும் ஆகும் = ஓகாரம்மிகுதல் புலம்பல் விளிக்கண்ணும் வரும்.

எனவே, மற்றை விளி உருபுகள் இம்மூன்றிடத்தும் கலந்துவரும் என்பது பெற்றாம்.