அர் ஆர் பவ்வூர் அகரம் மார் ஈற்ற = அர் ஆர் ப மார் என்னும் நான்கு விகுதிகளையும் இறுதியின் உடைய மொழிகள், பல்லோர் படர்க்கை = உயர்திணைப் பலர்பால் படர்க்கை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாம் , மார் வினையொடும் முடியும் = இவற்றுள் மார் ஈற்று வினைமுற்றுப் பொது விதியால் பெயருடன் முடிவது அன்றி வினையுடனும் முடியும். " மாரெதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவும் " எனப் பதவியலுள் கூறினமையால் , இவ்விரு விகுதியும் குறிப்பு முற்றிலே வாரா என்க.
இ. தெரி. | நி. தெரி. | எ. தெரி. | குறி. | | நடந்தனர் | நடக்கின்றனர் | நடப்பர் | குழையர் | } அவர் | நடந்தார் | நடக்கின்றார் | நடப்பார் | குழையார் |
நடப்ப , எய்துப , மொழிப , அவர் எனப் பவ்விகுதி வரும். " பெரிய வோதினுஞ் சிறிய வுணராப் - பீடின்று பெருகிய திருவிற் - பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே " என மார் ஈற்று வினைமுற்றுப் பெயருடன் முடிந்தது. பாடன்மார் என்பது பாடுவார் அல்லர் எனப்பொருள்படும்; 'அல்' எதிர்மறை இடைநிலை. " ஆர்த்தார் கொண்மார் வந்தார் " என மார் ஈற்று வினைமுற்று வினையொடு முடிந்தது. கொண் மார் என்பது கொள்வார் எனப்பொருள்படும். 8
|