அ ஆ ஈற்ற = அ ஆ என்னும் இருவிகுதிகளை இறுதியில் உடைய மொழிகள், பலவின் படர்க்கை- அஃறிணைப் பலவின்பால் படர்க்கை. வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம், ஆ எதிர்மறைக்கண்ணது ஆகும் = அவற்றுள் ஆகாரம் எதிர்மறையின் இடத்து வருமன்றி உடன்பாட்டின் இடத்து வாராது. ஆவே எதிர்மறைக்கண்ணதாகும் என்றதனால், மற்றை விகுதி உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும் என்பது பெற்றாம். அகரவிகுதி அன்சாரியை பெற்றும் பெறாதும் வரும் .
இ.தெரி | நி.தெரி | எ.தெரி | குறி | | நடந்தன | நடக்கின்றன | நடப்பன | கரியன | } அவை | நடந்த | நடக்கின்ற | நடப்ப | கரிய |
நடந்தில, நடவாநின்றில, நடவா - அவை. இல்லன, இல்ல என்னும் எதிர்மறை வினைக்குறிப்பு முற்றின்கண் பகுதியே எதிர்மறைப் பொருள் தந்து நிற்றலின், இதற்கு எதிர்மறை ஆகாரம் வேண்டாமையின் , ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால், இவ் எதிர்மறை விகுதி தெரிநிலைக்கே கொள்க. இங்கே காட்டிய அன் பெறாத நடப்ப என்னும் பல அறி சொல்லின் இறுதி நோக்கி உயர்திணைப் பன்மைப் படர்க்கைக்கும் அஃறிணைப் பன்மைப் படர்க்கைக்கும் பொதுவினை எனக் கொள்ளாது ஒழிக. இதனுள் பகர ஒற்று எதிர்கால வினை இடைநிலை ஆதலால், இத் தொடக்கத்தன எல்லாம் பலபொருள் ஒருசொல் என்று உணர்க. 10
|