தன்னிலையின் நிற்பதன்றி , அம் ஆம் என்பன முன்னிலையாரையும் = அம் , ஆம் என்னும் இவ்விரு விகுதிகளையும் இறுதியில் உடைய மொழிகள் முன்னிலை இடத்தாரையும் , எம் ஏம் ஓம் இவை படர்க்கையாரையும் = எம் , ஏம் , ஓம் என்னும் இம்மூன்று விகுதிகளையும் இறுதியில் உடைய மொழிகள் படர்க்கை இடத்தாரையும், உம் ஊர் கடதற இருபாலாரையும் = கும் , டும் , தும் , றும் என்னும் இந்நான்கு விகுதிகளையும் இறுதியில் உடைய மொழிகள் முன்னிலை படர்க்கை என்னும் ஈர் இடத்தார்களையும் , தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை = தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாம். கும் , டும் , தும் , றும் என்னும் நான்கும் தாமே காலம் காட்டுதலால் குறிப்புவினைக்கு வாரா.
இ.தெரி. | நி.தெரி. | எ.தெரி. | குறி. | | உண்டனம் | உண்கின்றனம் | உண்பம் | தாரினம் | } யாம் யானுநீயும் | உண்டாம் | உண்கின்றாம் | உண்பாம் | தாரினாம் | உண்டனெம் | உண்கின்றனெம் | உண்பெம் | தாரினெம் | } யாம் யானுமவனும். | உண்டேம் | உண்கிறேம் | உண்பேம் | தாரினேம் | உண்டோம் | உண்கின்றோம் | உண்போம் | தாரினோம் |
இ.தெரி. | எ.தெரி. | | ---------- | உண்கும் | } யாம் யானுநீயுமவனும் | உண்டும் | ---------- | வந்தும் | வருதும் | சென்றும் | சேறும் |
இவை சிறுபான்மை இம்முறை இன்றி மயங்கி வருதலும் உண்டு. மற்றவைகளும் இப்படியே வரும். 13
|