அரிதின் பெயக் கொண்டு - பஞ்சைக் கொண்ட போதும் வருத்தத்தோடு சிறிது சிறிதாக அடைப்பத் தன் உள்ளே கொண்டு , அப்பொருள் தான் பிறர்க்கு எளிது ஈவு இல்லது - கொடுக்கும் போதும் அப் பஞ்சைத் தான் பிறர்க்கு எளிதில் கொடாத குற்றம் உடையது , பருத்திக் குண்டிகை - பஞ்சு போட்ட குடுக்கை . கல்வியைக் கற்றபோதும் வருத்தத்தோடு சிறிது சிறிதாகக் கற்பிக்கத் தம்முள்ளே கொண்டு , பாடம் சொல்லும் போதும் அக் கல்வியைத் தாம் பிறர்க்கு எளிதில் கொடாத குற்றம் உடையவர் ஆசிரியர் ஆகாதவர் ஆதலால் , பருத்திக் குண்டிகை அவருக்கு உவமானம் ஆயிற்று .
|