அவற்றுள் = மேலைச் சூத்திரத்துள் சொல்லிய வினையெச்சங்களுள் , முதலில் நான்கும் = முதலில் உள்ள செய்து , செய்பு , செய்யாச் , செய்யூ என்னும் நான்கும் , ஈற்றில் மூன்றும் = இறுதியிலுள்ள வான் , பான் , பாக்கு என்னும் விகுதிகளை உடைய மூன்றும் , வினைமுதல் கொள்ளும் = வினை முதலைக் கொண்டு முடியும், பிற = நடுவிலுள்ள செய்தெனச் , செயச் , செயின் , செய்யிய , செய்யியர் என்னும் ஐந்தும், இவை போல்வன பிறவும் என்றதனால் வரும் செய்தால் முதலியவையும் , வினையெச்சக் குறிப்புக்களும் ஆகிய இவைகள்; பிறவும் ஏற்கும் = செய்பவனை அன்றி மற்றவைகளையும் கொண்டு முடியும்.
உ -தானடந்து வந்தான் பு - தானுண்குபு போனான் ஆ- தான் கல்லாக் கழித்தான் . ஊ- தான் கானூஉ மகிழ்ந்தான் வான் - தான் கொல்வான் செல்வான். பான் - தானலைப்பான் புகுந்தான் . பாக்கு - தான்றருபாக்கு வருவான் | முதலினான்கும் ஈற்றின் மூன்றும் வினை முதல் கொண்டு முடிந்தன. |
என | தானுண்டென மகிழ்ந்தான் பிறனுண்டென மகிழ்ந்தான் | இடையினைந்தும் வினை முதலும் பிறவுங்கொண்டன. | அ | தானுண்ண வருகிறான் பிறனுண்ணக் காண்கிறான் | இன் | தானுண்ணின் மகிழ்வான் பிறனுண்ணிற் கொடுப்பான் | இய | தானுண்ணிய வருவான் பிறனுண்ணிஇய கொடுப்பான் | இயர் | தானுண்ணியர் போவான் பிறனுண்ணியர் வழங்குவான் |
உண்டாலுவக்கும் , உண்டாற்பசிதீரும் எனவும், மழையின்றிப் பொய்ப்பின், விருந்தின்றி யுண்டான் எனவும், இன்ன என்றதனால் வரும்செய்தால் முதலியவையும் வினை எச்சக்குறிப்பும் இப்படியே வினைமுதலும் பிறவும் ஏற்றல் காண்க. 25
|