பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
அறுவகை வினா

 
385அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை
ஏவ றிரும்வினா வாறு மிழுக்கார்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அறிவு = அறிதலும் , அறியாமை = அறியாமையும் , ஐயுறல் = சந்தேகித்தலும் , கொளல் = கொள்ளுதலும் ,கொடை = கொடுத்தலும் , ஏவல் = ஏவுதலும் ஆகிய அறுவகைப் பொருளையும் , தரும் வினா ஆறும் இழுக்கார் = தருதலால் வரும் வினாக்கள் ஆறனையும் களையாது கொள்வர் புலவர்.

1.ஆசிரியன் இச்சூத்திரத்திற்குப் பொருள்யாது என்பது அறிவினா. 2. மாணாக்கன் அப்படிச் சொல்வது அறியா வினா. 3. குற்றியோ மகனோ என்பது ஐய வினா. 4. பயறு உளதோ வணிகீர் என்பது கொளல் வினா. 5. சாத்தனுக்கு ஆடையில்லையா என்பது கொடை வினா. 6. சாத்தா உண்டாயா என்பது ஏவல் வினா.