பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு வழுவாமல் காத்தல்

 
402அடைமொழி யினமல் லதுந்தரு மாண்டுறின் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அடைமொழி = முன்சொல்லப்பட்ட அடைசேர் மொழி , இனம் அல்லதும் தரும் = இனத்தைத் தருதலே அன்றி அதனோடு இனம் அல்லாததையும் தரும் , ஆண்டு உறின் = அவ் இடத்துக்குப் பொருந்தும் ஆயின் .

பாவஞ் செய்தான் நரகம் புகுவான் என்ற அளவிலே புண்ணியம் செய்தான் சுவர்க்கம் புகுவான் என இனத்தைத் தருதலே அன்றி , அவன் இது செய்யின் இது வரும் என்னும் அறிவிலி என்னும் இனம் அல்லாததையும் தந்தது . மேலைச்சேரிச் சேவல் அலைத்தது என்ற அளவிலே , கீழைச்சேரிச் சேவல் அலைப்புண்டது என இனத்தைத் தருதலே அன்றி . அச்சேவலை உடையார்க்கு வெற்றி ஆயிற்று என்னும் இனம் அல்லாததையும் தந்தது .

51