அந்தில் ஆங்கு = அந்தில் ஆங்கு என்னும் இவ்விரண்டு இடைச்சொல்லும் , அசைநிலை இடப்பொருள் - அசைநிலைப் பொருளவாயும் இடப் பொருளவாயும் வரும். 1. " அந்திற் கழலினன் கச்சினன், " - இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை. " வருமே - சேயிழை யந்திற் கொழுநற் காணிய." - இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத் தருதலால் இடம். 2. " ஆங்கத் திறனல்ல யாங்கழற. " - இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை. இதனுள், ஆங்கு என்னும் அசைநிலை ஆங்க என இறுதி விகாரமாய் நின்றது. "ஆங்காங் காயினு மாக. " - இங்கே அவ்விடத்து என்னும் பொருளைத் தருதலால் இடம். 18
|