அம்ம = அம்ம என்பது , உரையசை = உரை அசைப் பொருளைத் தருவதும் , கேண்மின் என்று ஆகும் =ஒன்று சொல்லுவேன் கேண்மின் என்னும் ஏவல்பொருளைத் தருவதுமாம். 1. " அதுமற்றம்ம ' - இங்கே கட்டுரைக்கண் வருதலால் உரையசை. 2. " அம்ம வாழி தோழி." - இங்கே ஒன்று சொல்வேன் கேள் என்னும் ஏவல்பொருளில் வந்தது. 19
|