பொதுப்பாயிரம்

பாடங் கேட்டலின் வரலாறு

 
45*அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அவ் வினையாளரொடு பயில் வகை ஒரு கால்- அக் கற்கும் தொழிலாளரோடு பழகும் வகையால் கால் கூறும்; செவ்விதின் உரைப்ப அவ் விரு காலும் - தன் மாணாக்கருக்குஞ் சபையாருக்கும் உணர விரித்துரைத்தலால் அரைக் கூறுமாக; மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும் - குற்றமற்ற புலமையானது நிரம்புதல் உடைத்தாகும்.

(அ.கு) * தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை மேற்கோள் .