உரியியல்

உயிர்ப் பொருள்களின் குணப் பண்பு

 
452அறிவரு ளாசை யச்ச மான
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அறிவு ........ மறவி = அறிவு ,அருள் , ஆசை ,அச்சம் ,மானம் ,நிறை ,பொறை ,ஒர்ப்புக், கடைப்பிடி மையல் ,நினைவு ,வெறுப்பு ,உவப்பு ,இரக்கம் ,நாண் ,வெகுளி ,துணிவு ,அழுக்காறு ,அன்பு , எளிமை ,எய்த்தல் ,துன்பம் ,இன்பம் ,இளமை ,மூப்பு ,இகல் ,வென்றி ,பொச்சாப்பு , ஊக்கம் ,மறம் ,மதம் ,மறவி என்னும் முப்பத்திரண்டும் , இனைய = இவை போல்வன பிறவும் , உடல் கொள் உயிர்க்குணம் = உடம்போடு கூடிய உயிர்களினுடைய குணங்களாம்
11