|
| பொதுப்பாயிரம் நூலினது வரலாறு முதனூல் இன்ன தென்பது | | 6 | அவற்றுள் , *வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும் | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | அவற்றுள் - அம் மூவகைநூலுள் , வினையின் நீங்கி விளங்கிய அறிவின் - இயல்பாகவே வினையினின்று நீங்கித் தானே விளங்கிய அறிவினையுடைய , முனைவன் கண்டது முதனூல் ஆகும் - கடவுள் உயிர்களுக்கு ஆதி காலத்திலே செய்தது முதல் நூலாம் . * தொல்காப்பியம் பொருள் அதிகாரம் மரபியல்.94 .
|
|